கெஜ்ரிவாலை 10 நாள்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறை கோரிக்கை!

மதுபானக் கொள்கையின் முக்கிய சதிகாரர் கெஜ்ரிவால் இருக்கிறார் அமலாக்க துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்ட்ட நிலையில், 10 நாள்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோரியுள்ளது.

மதுபான விசாரணை தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமலாக்க துறையினர் முதலமைச்சர் கெஜ்ரிவாலை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மூலம் கிடைத்த வருமானத்தை கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளதாகவும், அந்த கொள்கையில் உருவாக்குவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்தார். எனவே 10 நாள்கள் காவலில் எடுத்து கெஜ்ரிவாலிடம் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.

முன்னதாக, லஞ்சம் வாங்குவதற்கு உதவும் வகையில் விதிமுறைகளை (கலால்) கெஜ்ரிவால் உருவாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சிக்கும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கே கவிதாவுக்கும் இடையே இடைத்தரகராக விஜய் நாயர் என்பவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் அருகே தங்கியிருந்த விஜய் நாயர், மதுபான அதிபர்களுக்கு சலுகை கேட்டு பெறுவதற்காக, முதல்மைச்சருடன் நெருக்கமாகி அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
பஞ்சாப் தேர்தலுக்காக குற்றம் சாட்டப்பட்ட தென்னிந்திய குழுவைச் சேர்ந்த சிலரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ .100 கோடி கேட்டுள்ளார். கவிதாவிடம் சந்திப்பு நிகழ்த்திய கெஜ்ரிவால், மதுபானா கொள்கையில் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியதாக தகவல்கள் வந்துள்ளன. வருமானமாக கிடைத்த ரூ.100 கோடி மட்டுமல்ல, லஞ்சம் கொடுத்தவர்களால் பெறப்பட்ட லாபமும் குற்றத்தின் காரணமாக கிடைத்த வருமானம்தான். அனைத்து விற்பனையாளர்களும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பணம் செலுத்தியுள்ளனர். தென்னிந்திய குழுவிடமிருந்து பெறப்பட்ட சுமார் ரூ. 45 கோடி வருமானம், 2021-22 ஆம் ஆண்டில் கோவா பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சியால் பயன்படுத்தப்பட்டது. குற்றம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் அமலாக்கதுறை உறுதிபடுத்தியுள்ளது இந்த விவகாரத்தில் ஏராளமான பணம் கைமாறியுள்ளது. கெஜ்ரிவால் தனது கூட்டாளிகளின் பங்குக்கும் பொறுப்பேற்க வேண்டும். கோவா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பணம் கிடைத்ததாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன என அமலாக்கதுறை கூறியுள்ளது.

அமலாக்கதுறையினரால் மார்ச் 21ஆம் தேதி இரவில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இரவு முழுவதும் அமலாக்கதுறை காவலில் இருந்தார். இதைத்தொடர்ந்து தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற கெஜ்ரிவால், கீழமை நீதிமன்றத்தை அணுகினார்.

இன்று மதியம் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கை குறித்து, ” சிறையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் எனது வாழ்க்கையை நாட்டு மக்களுக்காக அர்பணித்துக் கொள்வேன்” என்று தெரிவித்தார்.