தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் விழாவை புறக்கணித்த அனுபமா பரமேஸ்வரன்!

நெட்டிசன்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் படத்தின் வெளியீட்டு விழாவை புறக்கணித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்!

தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ‘அ ஆ’ படம் மூலம் அறிமுகமான அனுபமா, தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ‘டில்லு ஸ்கொயர்’ தெலுங்கு படம் இன்று ரிலீசாகிறது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார் அனுபமா.

அதற்கு காரணம் என்ன என்பதை படத்தின் கதாநாயகன் சித்து நேற்று மேடையில் தெரிவித்தார். ‘படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியானது. அதில் அனுபமாவை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்துள்ளனர். நடிகை என்று வரும்போது அவர்களைப் பற்றிய கமெண்ட்டுகளை கவனமாக கையாள வேண்டும். இதனால்தான் அனுபமா வரவில்லை’ என்றார்.

குறிப்பிட்ட போஸ்டரில் அனுபமாவின் போஸ் ஆபாசமாக இருந்ததாக கூறி, அவரை நெட்டிசன்கள் தரக்குறைவாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.