நடிகை திரிஷா தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஷுட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கமலின் ‘தக் லைஃப்’ படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் திரிஷா. இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்காக திரிஷா வாங்கியுள்ள சம்பளம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுக்காலமாக நடிகையாக ஜொலித்து வருபவர் திரிஷா. என்றும் இளமை என்பதுக்கு எடுத்துக்காட்டாக பிரபலமான கதாநாயகியாக திகழும் இவர், உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ச்சியாக கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்ததை தொடர்ந்து த்ரிஷாவின் மார்கெட் கன்னாபின்னாவென்று உயர்ந்து விட்டது. மல்டி ஸ்டார் படமாக வெளியான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்திருந்தார் திரிஷா. உயிர் உங்களுடையது தேவி என்று ஒட்டுமொத்த இளைஞர்கள் பட்டாளமும் சொல்லும் அளவிற்கு இளவரசியாக பொன்னியின் செல்வனில் ரசிகர்களை வசீகரித்து இருந்தார் திரிஷா.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்தில் நடித்தார் திரிஷா. தளபதியுடன் இணைந்து நடித்த கையோடு அஜித் படத்திலும் நடிக்க கமிட் ஆனார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா தான் கதாநாயகி. நீண்ட காலமாக நடந்து வரும் இப்படத்தின் ஷுட்டிங்கிற்கு தற்போது படக்குழுவினர் கேப் விட்டுள்ளனர்.
இதனிடையில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் திரிஷா. இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘லியோ’ படத்தில் நடிப்பதற்காக திரிஷா ரூ. 5 கோடி சம்பளம் பெற்ற நிலையில், தற்போது தக் லைஃபிற்காக அவர் ரூ. 12 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக இதுவரை அதிக சம்பளம் வாங்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த நயன்தாராவை பின்னுக்கு தள்ளியுள்ளார் திரிஷா. இதனால் தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகை என்ற பெருமை திரிஷாவிற்கே கிடைத்துள்ளது.