தன் மகள் ஜான்வி கபூர் காதலித்து வரும் ஷிகர் பஹாரியா ரொம்ப நல்ல பையன் என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் தான் இந்த ஷிகர் பஹாரியா. ஜான்வியும், ஷிகர் பஹாரியாவும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அண்மையில் ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றபோது ஷிகரும் உடன் சென்றிருந்தார். தன் காதல் வாழ்க்கையை ரகசியமாக வைக்க விரும்பவில்லை ஜான்வி. காதலன் பற்றி தெரிந்தால் தன் கெரியர் பாதிக்கும் என அவர் நினைக்கவில்லை. மேலும் ஜான்வி கபூரின் தந்தை போனி கபூருடனும் ஷிகர் பஹாரியாவை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் ஷிகர் பஹாரியா பற்றி போனி கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
எனக்கு ஷிகரை பிடிக்கும். சொல்லப் போனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜான்வியும், ஷிகரும் டேட் செய்யவில்லை. ஆனால் அப்பொழுதும் நான் அவருடன் நட்பாக இருந்தேன். ஷிகர் ஒரு முன்னாள் காதலராக இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். ஜான்விக்கு மட்டும் அல்ல அர்ஜுனுக்கும், எனக்கும் ஆதரவாக இருக்கிறார் ஷிகர். அவர் எங்களிடம் மிகவும் நட்பாக பழகுகிறார். ஷிகர் போன்ற ஒரு பையன் எங்கள் வாழக்கையில் வந்ததை ஆசிர்வாதமாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மகளின் காதலரை பற்றி இப்படி பெருமையாக பேச பெரிய மனசு வேண்டும். அந்த மனசு போனி கபூருக்கு இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.