நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று 28வது பிறந்தநாள்!

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து பல படங்களின் அறிவிப்பு போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புதிய லுக்குடன் நடிகை ராஷ்மிகா காபி குடிக்கும் போட்டோ ஒன்றை போட்டிருந்தார். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் தாய்லாந்தில் டேட்டிங் செய்து வருகிறார்களா என்கிற கேள்விகளை ஃபேமிலி ஸ்டார் படத்தின் புரமோஷனுக்காக பரப்பி விட்டு வருகின்றனர்.

கன்னட நடிகையாக இருந்த ராஷ்மிகா மந்தனா இன்று தனது தாராள கவர்ச்சியால் நேஷ்னல் கிரஷ் ஆக மாறியுள்ளார். கேர்ள் ஃபிரெண்ட் எனும் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவில்லியாக கண் அருகே மான் போல கையை வைத்துக் கொண்டு பாடல் காட்சியில் நடனமாடிய ஸ்டில்லை வெளியிட்டு படக்குழு வாழ்த்தி உள்ளனர். கேர்ள் ஃபிரெண்ட் படத்தில் சுடிதார் அணிந்து கல்லூரி மாணவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தனுஷின் குபேரா படத்திலும் இவர் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான வாரிசு மற்றும் அனிமல் படங்கள் விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றன. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.