‘தலைவர் 171’ படத்தில் லோகியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்!

ரஜினியின் ‘தலைவர் 171’ படம் மீது தற்போது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படம் குறித்து தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். அத்துடன் இந்த படம் பற்றி வெளியாகும் புதிய புதிய தகவலும் பலரின் எதிர்பார்ப்பினை எகிற வைத்து வருகிறது. இந்நிலையில் ‘தலைவர் 171’ படம் குறித்து தற்போது மிரட்டலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். சென்சேஷனல் இயக்குனராக வலம் வரும் இவர் உச்ச நடிகர்களின் படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கமல், விஜய், கார்த்தியை வைத்து மிரட்டலான வெற்றிகளை பதிவு செய்துள்ள லோகேஷ், தற்போது முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வரும் ரஜினி, கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலரில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். ‘தலைவர் 171’ படமாக உருவாகவுள்ள இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அத்துடன் ஜுன் மாதத்திலிருந்து இப்படத்தின் ஷுட்டிங் துவங்கப்படவுள்ள நிலையில் படம் குறித்து புதிது
புதிதாக பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் தகவலாக ‘தலைவர் 171’ படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் ரிலீசான ‘இனிமேல்’ லவ் ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்பாடலில் ரொமான்ஸில் பிச்சு உதறி, அனைவரையும் வியக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து ஸ்ருதி ஹாசனை தற்போது தனது படத்தில் லோகேஷ் நடிக்க வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், ரஜினி படத்தில் நடிக்கவிருப்பதாக கசிந்துள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.