மராத்திய நடிகையான மிருணாள் தாகூர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் சீதாவாக என்ற கேரக்டரில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் உடைக்கு அதிக செலவு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக மிரணாள் தாகூர் நடித்திருந்தார்.இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி சும்மா பக்காவாக இருந்தது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படம் அனைத்து மொழியிலும் சக்கைபோடு போட்டது. சீதா ராமம் படத்திற்கு பிளஸை மிரணாள் தாகூரின் எதார்த்தனமான நடிப்புதான். இதில் நடித்த ராஷ்மிகாவுக்கு 4 கோடி சம்பளமும் மிருணாள் தாகூருக்கு 2 கோடி சம்பளமும் வழங்கப்பட்டது. இதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி தொடரில் விவகாரமான கதையில் நடித்துள்ளார். அதாவது திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை என்ற கதையில் பல கசமுசா காட்சியிலும் நடித்திருந்தார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 மூலம் பிரபலமடைந்த மிருணாளி தாகூருக்கு தற்போது பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதால், தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார்.
அதே போல பாலிவுட்டில் பாப்பி என்ற படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், விஜய் தேவரகொண்டாவுன் பேமிலி ஸ்டார் என்ற படத்தில் மிருணாள் தாகூர் நாயகியாக நடித்திருந்தார். ரொமான்டிக் காதல் திரைப்படமான இப்படம் ஏப்ரல் 5ந் தேதி வெளியான தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மிருணாள் தாகூர், நான் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்தேன். நான் பணக்காரி இல்ல, பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை எதிர்கொண்டு இருக்கிறேன். நான் இதுவரை டிசைனர் உடைகளை வாங்கியதே இல்லை. விலை உயர்ந்த உடைகள் வாங்குவது வீண்செலவு, பிடித்த உடைகளுக்காக அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கினாலும், அதை ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும். சினிமாக்கள், படவிழாக்கள், பார்ட்டி, இன்டர்விர்யூக்களுக்கு உடைகளை வாங்காமல் வாடகைக்கு எடுத்து உடுத்திக்கொண்டு செல்கிறேன். நடிகைகள் நிறைய பேர் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். சொந்தமாக உடைகள் வாங்க 2,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய மாட்டேன் என்றார்.
மிருணாள் தாகூர் சொன்னதை கேட்டு பலர், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நீங்கள் இப்படி சொல்லலாமா என்றும், உடை வாங்குவதில் இவ்வளவு கஞ்சத்தனம் கூடாது என்று நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துத் பதிவிட்டு வருகிறார்கள்.