முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன?

முந்திரிக்கொட்டைகள் அளவுக்கு முந்திரிப்பழங்கள் நன்மை தருகிறதா? முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? முந்திரிப்பருப்புகளை பொறுத்தவரை, புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும் அடங்கியிருப்பதால்தான், இதனை “இதயத்தின் தோழன்” என்கிறார்கள்.

முந்திரி பருப்பை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.. குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்.. இதனால், ரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறதாம்.. பச்சை முந்திரியைவிட, ஊறவைத்த முந்திரி சாப்பிட்டால், ஜீரணமாகும். ஆனால், முந்திரி பழங்களை சாப்பிடலாமா? முந்திரி பருப்புடன் ஒப்பிடும்போது, இந்த பழத்தில், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் நிறைய அடங்கியிருக்கின்றன..

வழக்கமாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் என்றால், ஆரஞ்சு, எலுமிச்சையை சொல்வோம்.. ஆனால், இவைகளைவிட, 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் வைட்டமின் சி நிரம்பியிருக்கிறாம். இந்த பழங்களிலுள்ள ப்ரோஆந்தோசயனின்கள் என்ற சேர்மமானது, பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்து, உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் தடுக்கிறது. இதனால், நோயெதிர்ப்பு மண்டலமும் வலுப்படுகிறது.. அனீமியா பிரச்சனை இருப்பவர்கள், இரும்புச்சத்து நிறைந்த இந்த முந்திரி பழங்களை சாப்பிடலாம்.. இதனால், ரத்த சோகை வெகுவாக குறையும். ஆனால், இந்த பழத்தை மரத்திலிருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டுமாம்.. இல்லாவிட்டால் அழுகிவிடும்.

பெரும்பாலும் இந்த பழத்தை அப்படியே சாப்பிட முடியாது.. வேக வைத்து சாப்பிடலாம் அல்லது உப்பு நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாது. முந்திரிப்பழத்தை வைத்து நிறைய சமையல் செய்வார்கள்.. முந்திரிப்பழத்தில் சட்னி செய்வார்கள்.. ஜாம் செய்வார்கள்.. ஆஸ்துமா பிரச்சனைக்கும் இந்த பழம் நிவாரணத்தை தருகிறது.. ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்சனைகளை சரிசெய்து நகங்களை ஆரோக்கியமானாக வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிட்டவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேண விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம். கல்லீரல் உட்பட உடலின் பாகங்களிலுள்ள நச்சுக்களை நீக்கி, அவைகளை சுத்தப்படுத்துவதில் முந்திரி பழங்களுக்கு பெரும் பங்கு உண்டு.. உடலிலுள்ள கொழுப்பை எரிக்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதற்கு பிறகு, உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறதாம்..

ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழம் பேருதவி செய்கிறது.. இதன்மூலம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்களும் தடுக்கப்படுகின்றன. இந்த முந்திரி பழத்திலிருந்து சாறு எடுத்து, தலைமுடிக்கு பயன்படுத்தினால், பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் நீங்கும்.. வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இரண்டுமே இந்த முந்திரி பழத்தில் உள்ளதால், சருமத்துக்கும், தலைமுடிக்கும் மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது.. அதனால்தான், முகத்துக்கு பயன்படத்தப்படும் லோஷன்கள், கிரீம்களிலும், தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் ஷாம்புகளிலும் இந்த சாறு மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.