கோவை மக்களவை தொகுதியில் முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 27,269 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலையை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை இராமச்சந்திரன், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்நிலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 27,269 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை 19,869 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 12,871 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கலாமணி ஜெகநாதன் 3,678 வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் சுற்றில் மொத்தம் 65,513 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் நோட்டாவுக்கு 501 வாக்குகள் பதிவாகி உள்ளன.