அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 68829 வாக்குகள் பெற்றுள்ளார். 261975 வாக்குகள் பெற்று 106075 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார் ஸ்மிருதி இரானி.
அமேதி மக்களவைத் தொகுதியானது, திலோய், சலோன், ஜகதீஷ்பூர், கௌரிகஞ்ச் மற்றும் அமேதி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த தொகுதி வடக்கில் பாரா பாங்கி மற்றும் பைசாபாத், மேற்கில் ரேபரேலி, கிழக்கில் சுல்தான்பூர் மற்றும் தெற்கில் பிரதாப்கர் ஆகிய முக்கியமான பகுதிகளை கொண்டது ஆகும். இது பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஆகும். 1967- 1971 வரை இங்கே காங்கிரஸ் எம்பி இருந்தார். 1981- 1996 வரை மீண்டும் காங்கிரஸ் இருந்தது. அதேபோல் 1999- 2014 வரை மீண்டும் இங்கே காங்கிரஸ் இருந்தது. இங்கே 2004 – 2014 வரை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இங்கே எம்பியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கே ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி வீழ்த்தினார். 2014 பிரச்சாரத்தின் போது ஸ்மிருதி இரானியை “who” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். ஆனால் அவருக்கு பதிலடி கொடுத்து ராகுல் காந்தியை வீழ்த்தினார். 2019ல் மிக நெருக்கமாக வந்து 468,514 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். 413,394 வாக்குகள் பெற்று ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி ஆகிய நேரு-இந்திரா குடும்பத்தின் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமலேயே இழுத்தடித்து வந்தது. இதனை பாஜக அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுத்தது. இங்கே பலரின் பெயர்கள் சுற்றி வந்தன. ஏன் ராகுல் கூட மீண்டும் அமேதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. கடைசியில் ஆனால் அதிரடியாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் களமிறங்கி உள்ளனர். ராகுல் காந்தியின் இந்த தடாலடி வியூகமானது பாஜகவினரை ‘வாயடைக்க’ வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முக்கியமாக ஸ்மிர்தி இராணியை நான் எதிர்க்க வேண்டியது இல்லை.. கட்சி தொண்டர் கே எல் ஷர்மா போதும். அவரே உங்களை வீழ்த்துவார். நான் உங்களுக்கு போட்டியில்லை.. மோடிக்குத்தான் போட்டி என்று ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியிடம் சொல்லாமல் சொல்லி கே எல் ஷர்மாவை களமிறங்கினார். ராகுல் போட்டியிடுவார். அதை வைத்து நான் பெரிய ஆள் என்று சொல்ல ஸ்மிருதி இரானி நினைத்தார். ஆனால் நேரு குடும்பத்தின் மிக நெருக்கமான விசுவாசமான கே.எல்.ஷர்மாவை களமிறக்கியிருக்கிறார் ராகுல் காந்தி.
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி படுதோல்வியை அடைந்து இருக்கிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஸோரி லால் 368487 வாக்குகள் பெற்றுள்ளார். அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 68829 வாக்குகள் பெற்றுள்ளார். 261975 வாக்குகள் பெற்று 106075 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார் ஸ்மிருதி இரானி.