ரஜினிகாந்தை சந்தித்த ராதிகா, சரத்குமார், வரலட்சுமி!

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்புக்கான காரணத்தை வரலட்சுமி சரத்குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிக்கும், அவரது மனைவி லதாவுக்கும் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வரலட்சுமி சரத்குமாருக்கு அவரது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை குடும்பத்தினருடன் சந்தித்து, அவரது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.