நடிகை பிந்து மாதவி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

நடிகை பிந்து மாதவி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆன நிலையில், சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறார்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்ற பிந்து மாதவி 4வது ரன்னர் அப்பாக வெளியேறினார்.
ஓவியா இருந்த நிலையில், இவர் அந்த சீசனில் பெரிதாக ஷைன் ஆகவில்லை. இந்நிலையில், தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

ஆவக்காய் பிரியாணி எனும் தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானவர் பிந்து மாதவி. தமிழில் பொக்கிஷம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தாலும் பெரியளவில் ஹீரோயினாக இவர் ஷைன் ஆகவில்லை.

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்கள் மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிந்து மாதவி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.