நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று 39வது பிறந்த நாள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் காஜல் அகர்வாலுக்கு இன்று 39வது பிறந்த நாள். இவர் 1985ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தமிழில் துப்பாக்கி, மெர்சல், நான் மகான் அல்ல, மாரி, பாயும் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள மிகப்பெரிய படமாக இந்தியன் 2 உள்ளது. இந்தப் படம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியிடப்படவுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கீட்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு நீல் கீச்சுலு என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம், அதன் பின்னர் குழந்தை பிறந்த பின்னரும் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் காஜல் நடித்து வருகின்றார். இவர் அதிகப்படியான பணக்காரர்கள் வசிக்கக்கூடிய மும்பையின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றார். இவரிடம் ஆடி, மெர்சிடஸ் மற்றும் மினி கூப்பர் போன்ற விலை உயர்ந்த கார்கள் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 85 கோடி ஆகும். இவர் ஒருபடத்தில் நடிக்க ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்குகின்றார்.

சினிமா வாய்ப்புகள் கொஞ்சம் டல் அடிக்கும்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கி மக்கள் மத்தியில் தன்னை தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றார். விளம்பரங்களில் நடிக்க காஜல் அகர்வால் ரூபாய் ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். தற்போது மான்யவர் மற்றும் டைட்டன் வாட்ச் ஆகியவற்றுடன் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் சமூகத் தொண்டு விஷயங்களிலும் காஜல் அகர்வால் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு இன்று 39வது பிறந்த நாள். அவருக்கு திரை உலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.