‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார், ‘துணிவு’ படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட்பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதை அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் அஜித் கையில் ஒரு டிராவல் பேக் உடன் நடந்து வருகிறார். இந்த போஸ்டரை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டர் மிகவும் சிம்பிளாக இருப்பதாகவும், ரசிகர்களின் கைவண்ணத்தில் உருவாகும் ஃபேன்மேட் போஸ்டர்களே மிகவும் கச்சிதமாக இருக்கும் சூழலில், படக்குழு எந்தவித முயற்சியும் செய்யாமல் ‘விடாமுயற்சி’ போஸ்டரை உருவாக்கியுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.