நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்!

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி கூடுகிறது. அதேநாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் பரிந்துரைப்படி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 – 25ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மூன்றாவது முறையாகவும், தேஜ கூட்டணி அரசு அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பாட்ஜெட் இதுவாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.