ஜாமீனில் வெளிவர வேண்டும் என்று விரும்புவோருக்கு அதாவது பிணையில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்கள் குறித்த கூகுள் லொகேஷன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் ஜாமீன் கேட்டு மனு அளித்த போது, டெல்லி உயர்நீதிமன்றம் முக்கியமான நிபந்தனை விதித்தது. அதாவது குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வந்த பிறகு வெளியே செல்லும் போது, எங்கே எல்லாம் செல்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூகுள் லோக்கேசனை போலீசுக்கு பகிர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த ரூல் ஜாமின் பெறுவோருக்கு நிபந்தனையாக விதிக்கப்படுவது தொடர்கிறது. இதேபோல் நைஜீரிய இளைஞரான குற்றம்சாட்ட நபர், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்பதற்கான உத்தரவாதத்தை டெல்லி நைஜீரியன் கமிஷனிடம் பெற வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பையன் தலைமையிலான அமர்வு, பிணையில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்கள் குறித்த கூகுள் லொகேஷன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தனியுரிமை உரிமைகளை மீறுவதற்கு சமம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் பிணை பெறுவதற்கான நிபந்தனையாக கூகுல் லொக்கேசனை விசாரணை அமைப்புகளிடம் பிணை பெரும் நபர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் தனியுரிமையைப் பார்க்கவும் ஜாமீன் நிபந்தனையாக கூகுள் லோக்கேசன் பகிர்வது இருக்க முடியாதும் என்று உச்ச நீதிமனறம் கூறியுள்ளது. மேலும் சம்பந்தபட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டர் நைஜீரியர் என்கிற நிலையில், அவர் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்று நைஜீரிய உயர் ஆணையத்திடம் இருந்து உத்தரவாதம் பெறுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையையும் உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மொத்தத்தில் ஜாமீன் வழங்குவதன் நோக்கத்தைத் தோற்கடிக்கும் நிபந்தனைகள் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.