தங்கலான் படத்திற்காக 100% கஷ்டப்பட்டுள்ளேன்: விக்ரம்!

நடிகர் விக்ரம், தன்னுடைய கேரியரில் தான் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டு நடித்த படங்கள் பிதாமகன், ஐ மற்றும் இராவணன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படங்களில் தான் பட்ட கஷ்டங்கள் மூன்று சதவீதம் மட்டுமே என்றும் தங்கலான் படத்தில் 100% கஷ்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இவரது நடிப்பு அதிகமான சிரத்தையுடன் மெனக்கெடல்களுடன் ஒவ்வொரு படத்தையும் சிறப்பாக்கி வருகிறது. வெற்றி -தோல்வி குறித்த எந்த கவலையும் இல்லாமல் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக்கும் வித்தையில் கை தேர்ந்தவராக காணப்படுகிறார் விக்ரம். அந்த வகையில் கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. படத்தில் ஆதித்ய கரிகாலனாக, நந்தினியின் காதலனாக மிகச் சிறப்பான நடிப்பை ஒரு காதல் தோல்வியின் வலியை கொடுத்திருந்தார் விக்ரம்.

இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சில இடங்களிலும் மும்பையிலும் மற்றும் வெளிநாட்டிலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ள நடிகர் விக்ரம், தன்னுடைய கேரியரில் தான் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டு நடித்த படங்கள் பிதாமகன், ஐ மற்றும் இராவணன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படங்களில் தான் பட்ட கஷ்டங்கள் மூன்று சதவீதம் மட்டுமே என்றும் தங்கலான் படத்தில் 100% கஷ்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது இந்த கஷ்டங்களுக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தில் வயதான மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ளார்.