திரைப்படம் மக்களை சென்றடைய சமூக வலைதளம் உதவுகிறது: மாளவிகா மனோஜ்!

‘ஜோ’ வெளிவந்தபோது அது தொடர்பான ரீல்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன. இதன் மூலம் படம் அதிகமான மக்களை சென்றடைந்தது என்று நடிகை மாளவிகா மனோஜ் கூறினார்.

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மனோஜ். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘பிரகாஷன் பரக்கட்டே’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, படத்தில் அறிமுமான இவர் அதன்பிறகு ‘நாயாடி’ படத்தில் நடித்தார். இவர் தமிழில் ‘ஜோ’ படம் மூலம் அறிமுகமானார். மாளவிகா மனோஜ் ‘பிரகாஷன் பரக்கட்டே’ படத்தின் மூலம் அறிமுகமானாலும், தமிழில் அவர் நடித்த ‘ஜோ’ படம்தான் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.

இந்நிலையில், நடிகை, மாளவிகா மனோஜ் ஒரு திரைப்படம் மக்களை சென்றடைய சமூக வலைதளம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பகிர்ந்துள்ளார், இது குறித்து அவர் கூறியதாவது:-

‘ஜோ’ வெளிவந்தபோது அது தொடர்பான ரீல்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன. இதன் மூலம் படம் அதிகமான மக்களை சென்றடைந்தது. சொல்லப்போனால், இந்த நாட்களில் இதுபோன்ற ரீல்களைப் பார்த்துதான் பலர் படம் பார்க்க முடிவு செய்கிறார்கள். இப்போதும், நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை சுச்சி என்றே அழைக்கிறார்கள். இப்படம் வெளியாவதற்கு முன் கேரளாவில் என்னை யாருக்கும் தெரியாது. ஆனால், படம் வெளியான பிறகு என்னை பலருக்கு தெரிய வந்தது. கேரளாவில் ‘ஜோ’ படம் ஓடிடியில்தான் வெளியானது. இதனால், நான் ஒரு தமிழ் பெண் என்று கேரளாவில் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள், ஆனால் நான் ஒரு மலையாளி. இவ்வாறு அவர் கூறினார்.