ஹிண்டன்பர்க் அறிக்கை உண்மை இல்லை: செபி தலைவர் மாதபி!

அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நாளை பங்கு சந்தை ரத்தக்களரியாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளன. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரிய வாய்ப்புகள் உள்ளன.

கடந்த வருடம் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான், அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தலைவர் மாதபி புச்-க்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு உள்ளது. முறைகேட்டில் உடந்தை என்பதாலேயே அதானி குழுமம் மீது SEBI தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பரபரப்பு புகார் வைத்து உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். அதனால்தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

அதாவது செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம். அதானி குழுமம் எந்த அச்சமும் இல்லாமல் பணிகளை செய்கிறது. இதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு இடையே உள்ள உறவே காரணம். தற்போதைய செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

மதாபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் ஜூன் 5, 2015 அன்று ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த விசில்ப்ளோவர் ஆவணங்கள் மூலம் அந்த தம்பதியரின் நிகர மதிப்பு $10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடுகளை செய்துள்ளது. செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ளது.

அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நாளை பங்கு சந்தை ரத்தக்களரியாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளன. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரிய வாய்ப்புகள் உள்ளன.

நாளை அதானி குழுமத்தில் இருந்து பலர் பங்குகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதானி குழுமம் காரணமாக மற்ற நிறுவனங்களின் பங்குகளும் சரியலாம். இது அதானி குழுமம் என்பதை தாண்டி செபி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். செபிதான் பங்கு சந்தை ஒழுங்காற்று வாரியம்.. அப்படி பட்ட வாரியம் புகாரில் சிக்கி உள்ளது. இதனால் அதானி குழுமம் என்று இல்லாமல் மொத்தமாகவே பங்கு சந்தை சரியாய் வாய்ப்புகள் உள்ளன. மொத்தமாக பங்கு சந்தையில் பல பங்குகள் படுக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம், என்று ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக செபி தலைவர் மாதபி பூரி புச் தெரிவித்துள்ளார்.

ஹிண்டன்பேர்க் அறிக்கையில் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். அந்த அறிக்கை முழுக்க முழுக்க எந்த உண்மையும் அற்றது. எங்கள் வாழ்க்கையும் நிதியும் ஒரு திறந்த புத்தகம். எங்களின் முதலீடுகளை நாங்கள் வெளிப்படையாகவே செய்து இருக்கிறோம். எங்களின் முதலீடுகள் பற்றிய அனைத்து தகவல்களும் பல ஆண்டுகளாக செபிக்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் செபிக்கு வரும் முன் குடிமக்களாக இருந்த காலகட்டம் உட்பட அனைத்து காலத்திலும் மேற்கொண்ட நிதி முதலீடுகள் குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட தயாராக இருக்கிறோம்.

எங்கள் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க தவறானது. இது தொடர்பாக வரும் நாட்களில் இது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்டேட்மென்ட் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.