ஹுண்டன்பர்க் பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்: அண்ணாமலை!

பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்க்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பனைவிதைகள் நடும் நி கழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

திமுகவினருக்கு தேசியக் கொடி என்றாலே பிரச்சினைதான். தேசியக் கொடியை கொண்டு செல்வதால் என்ன சட்ட்ம ஒழுங்கு பிரச்சினை ஏற்படப் போகிறது. பைக் பேரணி நடத்த அனுமதி மறுக்கிறது. ஹுண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் ஏற்படுத்தும் வகையில் பங்குச் சந்தை இறங்குவதை முன்கூட்டியே கணித்து செய்திகளை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவகை முன்கூட்டியே கணித்து அதை விற்று லாபம் பார்க்கிறது. உலகில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹுண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.