விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற விஜய் மலர் தூவி மரியாதை!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நன்றியும் தெரிவித்தார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஏ.ஐ படத்தை பயன்படுத்தியதற்கு அனுமதி தந்ததற்காக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோரும் உடன் இருந்தனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நன்றியும் தெரிவித்தார். கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.