மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து: மத்திய அரசு!

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், இதை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி அமைப்பிற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி இருக்கிறார்.

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் என்டிஏ கூட்டணியில் கூட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மத்திய அரசின் பணிகளுக்கு நேரடி நியமனம் என்ற அறிவிப்பு ரத்து என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நேரடி நியமன நடவடிக்கையை நிறுத்தி வைக்க யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அரசில் பணியாற்ற நேரடியாக மூத்த அதிகாரிகள் 45 பேரை நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் எனப் பிரதமர் கூறியுள்ளார் என்றும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.