கிழக்கு உக்ரைனில் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது என்று ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா,100 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. கார்க்கிவ், மரியும்போல் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைகள், குண்டுகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஏரளாமான வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன.
இந்த நிலையில் உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், ரஷ்ய எதிர்ப்பு திட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் முதலீடு செய்வதாக தெரிவித்தார். உக்ரைனை வைத்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் விளையாடி வருவதாகவும் அது விரைவில் முடிவுக்கு வரும் என்றும் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைன் உலக வரைபடத்தில் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.