மலையாள திரையுலகில் பாலியல் ரீதியிலான சீண்டல்கள் தலைவிரித்தாடுவதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் குறை கூறக்கூடாது என முன்னணி நடிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சினிமாவில் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டு அழைப்பது குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹேமா கமிஷன் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிடப்பட்டது. அதில், மலையாளத் திரையுலகில் காஸ்டிங் கவுச் ஒரு பெரிய பிரச்சினையாகவே மாறி உள்ளது. இது பெண்கள் மீதான சுரண்டலுக்கு வழவகுக்கிறது என்றும், வேலை வேண்டும் என்றால், அதற்கு ஈடாக பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இது ஆபத்தான ஒரு விஷயமாக மாறி வருவதாகவும், பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்கப்படுவதாகவும், மலையாள சினிமாவில் இது சகஜமாக நடந்து வருவதாகவும், சினிமா கனவோடு வரும் பெண் நடிகர்களை கட்டாயப்படுத்துவது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என்றும், அவர்களை சமசரம் செய்து கொண்டு சிலர் படவாய்ப்பை பெற்று வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தற்போது, மமைலையாள சினிமாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்த அறிக்கைக்கு பலரின் ஆதரவு இருந்தாலும், சில நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை பார்வதி திருவோத்து, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், ஹோமா கமிஷன் அறிக்கையை வைத்து, சினிமாத்துறையில் உள்ள அனைத்து பெண்களும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் என்பது போல பொத்தம் பொதுவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹேமா கமிட்டியின் அறிக்கையை வெளியே கொண்டுவரவே பல ஆண்டுகளாக போராடியதாகவும், ஆனால் அந்த அறிக்கையில் உள்ள சர்ச்சையான கருத்து குறித்து பேசுவது சரியாக இருக்காது. அறிக்கையின் அடிப்படையில் கேரள சினிமாத்துறையில் என்னென்ன மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதை பற்றி பேச வேண்டிய நேரம் என்றார்.