முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59-வது முறையாக நீட்டிக்கப்ப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தன. தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை வரும் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 59-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.