அவதுாறு பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1910 கோடி அபராதம் விதித்து மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர், எழுத்தாளரான ரிச்டர் மொராலஸ் மீது போதைப்பொருள் கடத்தல் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் 2014ல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தி தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அப்பதிவை நீக்குமாறும் கூகுளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
பதிவு நீக்கப்படாததால் 2015ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘கூகுள் நிறுவனம் ரூ. 1910 கோடி ரிச்டர் மொராலஸ்க்கு செலுத்த வேண்டும்’ என தீர்ப்பளித்தது.
இதற்கு பதிலளித்த கூகுள் நிறுவனம், ‘இது கருத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகளை குறித்து மதிப்பிடும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ எனவும் தெரிவித்துள்ளது.