கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சமயத்தில் தேதிகள் குளறுபடியால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் விலகி விட்டார்கள். பின்பு சிம்பு படத்தில் இணைந்தார். இதனையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரேக கட்டமாக முடித்து விட்டார்கள்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்ட கையுடன், படத்தின் டிஜிட்டல் உரிமையையும் விற்றுவிட்டது படக்குழு. இதனை உரிமையை 149.7 கோடி ரூபாய்க்கு கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது தமிழ் படங்களில் அதிக விலைக்குப் போன டிஜிட்டல் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது.