விஜய் 69 படத்தில் நடிகர் பாயி தியோல் இணைந்ததாக அறிவிப்பு!

விஜய் 69 படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், கோட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹெச். வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பில், முதல் நடிகராக பாபி தியோல் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
5-ம் தேதி முதல் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பெரும்பாலான காட்சிகளை பிரம்மாண்ட அரங்கு ஒன்றில் படமாக்க உள்ளார்கள். அதனை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் ஹெச்.வினோத். அது முடிவானவுடன் அந்த அரங்கின் பணிகள் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாக இருக்கிறது.