விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒன்ஸ்மோர் படத்தில் அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களிலும் ரொம்பவே பவ்யமாக நடித்து வந்த அதிதி ஷங்கர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி மற்றும் அர்ஜுன் தாஸ் என தற்போது காதல் பறவையாக மாறி ரசிகர்களை ஷாக் ஆக்கும் அளவுக்கு காட்சிகளில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த் படத்தின் டைட்டிலை வைத்து பல புதிய படங்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியாகி விட்டது. இந்நிலையில், அடுத்த டிரெண்டாக விஜய் நடித்த படங்களின் டைட்டிலை எல்லாம் புது இயக்குநர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய படத்துக்கு லவ் டுடே டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள படத்துக்கு ஒன்ஸ் மோர் என மீண்டும் விஜய் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இனிமேலும், ஹோம்லி லுக்கில் நல்ல பொண்ணாக நடித்தால் எல்லாம் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர முடியாது என நினைத்த அதிதி ஷங்கர் இறங்கி நடிக்க ஆரம்பித்துள்ளார். காதல் படங்களை குறிவைத்து அடுத்தடுத்து அவர் நடித்து வருவதை பார்த்தால் கோலிவுட்டில் ஸ்ட்ராங்காக ஒரு ஹீரோயின் அந்தஸ்த்தை பிடித்து விடுவார் என்றே தெரிகிறது.
இளையாராஜா பிடிக்குமா? ஏ.ஆர். ரஹ்மான் பிடிக்குமா? என டீசரில் அதிதி ஷங்கர் கேள்வி எழுப்ப ஹாரிஷ் ஜெயரஜ் என தக் லைஃப் பதில் அளிக்கும் அர்ஜுன் தாஸ் ஷங்கர் பிடிக்குமா? மணிரத்னம் பிடிக்குமா? என்கிற கேள்விக்கு பாலசந்தர் என ஷங்கர் மகளிடமே சொல்லும் வசனங்கள் எல்லாமே டீசரை பார்த்தாலே செம ஃபிரெஷ்ஷாக படம் இருக்கும் என்கிற உணர்வை கடத்துகிறது.
கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் டீசரை தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.