இன்னும் 5 வருடங்களுக்கு வயலன்ஸ் திரைப்படத்தை மட்டும் தான் நான் எடுப்பேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் “கூலி.” சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைவதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகரித்து காணப்படுகிறது. படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திர ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த சினிமா உரையாடல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:-
கூலி திரைப்படம் எல்.சி.யூ யூனிவர்சில் சேராது. நான் எந்த திரைப்படத்தையும் 6 மாதத்திற்கு மேல் படப்பிடிப்பு பணிகளை தொடர மாட்டேன். எல்.சி.யூ கான்செப்ட் உருவாகிவிட்டது அதற்கு ஏற்ற தர்மத்தை கொடுத்து ப்ராப்பராக முடிக்க வேண்டும். இன்னும் 5 வருடங்களுக்கு வயலன்ஸ் திரைப்படத்தை மட்டும் தான் நான் எடுப்பேன். ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு என தனி திரைப்படம் வரும். கூலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு திரைப்படம் இயக்கவுள்ளேன். அதில் என் படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் இருப்பார்கள். நான் இதுவரை எடுக்க நினைத்த கதை இரும்பு கை மாயாவி அதை நான் இன்னும் எடுக்கவில்லை. அப்படத்தில் துப்பாக்கி மற்றும் வயலன்ஸ் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.