நடிகர் பகத் ஃபாசில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வேட்டையன் படத்தில் பகத்துடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகளில் நடித்திருந்த ரித்திகா சிங் அவருக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் நடிப்பு நேச்சுரலாகவே வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது படத்திற்கான வரவேற்பு திரையரங்குகளில் குறைந்துள்ளதாகவும் இதனால் வசூல் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை லைகா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் நடத்தப்பட்டு படக்குழுவினருக்கு மட்டன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதில் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் மற்றும் நடிகை ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்து உபசார நிகழ்ச்சிகளில் ரித்திகா சிங் படக் குழுவினருக்கு பிரியாணி பரிமாறியதையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தற்போது படத்தில் நடிகர் பகத் ஃபாசிலுடன் இணைந்து நடித்தது குறித்து ரித்திகா சிங் தனது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். பகத்திற்கு அவரது நடிப்பு மிகவும் பிரில்லியண்ட் என்றும் தன்னுடைய ஃபேவரிட் நடிகர்களில் அவரும் ஒருவர் என்றும் ரித்திகா சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டேக்கிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதாகவும் ரித்திகா பாராட்டியுள்ளார்.
அவர் நடிக்க வேண்டிய தேவை இல்லாத காட்சிகளிலும் குறிப்பாக மற்றவர்கள் பேசுவதை கேட்கும் காட்சிகளிலும் புதிதாக எதையாவது ட்ரை செய்துக் கொண்டே இருப்பார் என்று ரித்திகா தெரிவித்துள்ளார். எந்த காட்சியிலும் அவர் சிரமப்பட்டு நடிப்பதில்லை என்றும், அவருக்கு நடிப்பு மிகவும் நேச்சுரலாகவே வருவதாகவும் ரித்திகா மேலும் கூறியுள்ளார். அவரிடம் இருந்து தான் வேட்டையன் படதின் ஒவ்வொரு டேக்கிலும் அதிகமான விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் ரித்திகா சிங் தெரிவித்துள்ளார். அவரின் நடிப்பை கூர்ந்து கவனித்தே தான் அதிகமான விஷயங்களை அவரிடமிருந்து பெற்றுக் கெண்டதாவும் கூறியுள்ளார்.