பல்வேறு விளையாட்டுகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் போட்டிகள் நிதி தட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்தாண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கிய விளையாட்டுகளான ஹாக்கி, கிரிக்கெட், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.
காமன்வெல்த் சம்மேளனத்தின் நடவடிக்கையை விமர்சித்து ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
ஹாக்கி, துப்பாக்கிச் சூடு, பேட்மிண்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை போட்டிகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது.
கிளாஸ்கோவில் அனைத்து போட்டிகள் கொண்ட காமன்வெல்த் விளையாட்டை நடத்த முடியவில்லை என்றால், ஆஸ்திரேலியா விலகியபோது, நடத்த ஒப்புக் கொண்டது ஏன்? வேறு நகரத்துக்கு மாற்ற வழிவகை செய்யாதது ஏன்?
இந்த விஷயத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டு, கைவிடப்பட்ட அனைத்து விளையாட்டுகளையும் மீண்டும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வரும் 2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. தடகளம், பாரா தடகளம், நீச்சல், பாரா நீச்சல், ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், பாரா சைக்கிளிங், நெட்பால், பளுதூக்குதல், பாரா பவா் லிஃப்டிங், குத்துச்சண்டை, ஜூடோ, பௌல்ஸ், பாரா பௌல்ஸ், 3-3 கூடைப்பந்து, 3-3 வீல்சோ் கூடைப்பந்து போன்றவை நடத்தப்படுகின்றன.
நிதி நிலைக்கு ஏற்றவாறு முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், கிரிக்கெட், டேபிள் டேன்னிஸ், ஸ்குவாஷ், பாட்மின்டன், டிரையத்லான் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியா அதிகம் பதக்கம் பெறும், விளையாட்டு நீக்கத்தால், விளையாட்டு ஆா்வலா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்க அறுவடை செய்யும் விளையாட்டுகளாக துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட், ஹாக்கி உள்ளன. இவை நீக்கப்பட்டது இந்திய விளையாட்டுத் துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் வீரா், வீராங்கனைகள் அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளனா். ஹாக்கியில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலமும், மகளிா் அணி தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றுள்ளது. பாட்மின்டனில் 10 தங்கம் உள்பட 31 பதக்கங்கள் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் 63 தங்கத்துடன் 135 பதக்கங்கள், மல்யுத்தத்தில் 49 தங்கம் உள்பட 114 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.