நயன்தாராவின் ஆவணப்படம் நவம்பர் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் ரெசார்ட் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆவண திரைப்படம் 2 ஆண்டுகள் தாமதமான நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நயன்தாரா குழந்தை பருவத்திலிருந்து குமரியாக வளர்ந்து காதல் வலையில் விழுந்து பல சந்தோசங்களையும் சோகங்களையும் சந்தித்து சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனைத்து கதைகளையும் ஆவணப்படமாக ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறார். வரும் நவம்பர் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக இந்த ஆவணப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. N என்கிற எழுத்தில் ஆரம்பிப்பதாலே நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இந்த ஆவணப்படத்தை வெளியிடும் உரிமையை பெரிய தொகைக்கு நயன்தாரா விற்றதாக கூறுகின்றனர்.

நடிகை நயன்தாராவின் பிரைவேட் வாழ்க்கை இதுவரை பிரைவேட்டாகவே இருந்து வந்த நிலையில், முதல் முறையாக மனம் திறந்து தன்னை வெளிப்படுத்தப் போகிறார் நயன்தாரா. பல்வேறு சுவாரஸ்ய தருணங்களையும் தனது வாழ்க்கையை மாற்றிய தருணங்களையும் மனிதர்களையும் பற்றி பேசியுள்ள ஆவணப்படம் பிறந்தநாள் பரிசாக வெளியாக காத்திருக்கிறது.