கர்நாடக முதல்வர் சித்தராமையாைவுக்கு முடா வழக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சித்தராமையா மனைவி பார்வதியிடம் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்திய இருந்த நிலையில், இப்போது சித்தராமையாவும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உள்ளது. இந்த முடா வாரியம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது பூதாகரமாக வெடித்துள்ளது. முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட், விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக வரும் நவம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக கடந்த அக். 25ம் தேதி தான் சித்தராமையாவின் மனைவி பார்வதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இப்போது அம்மாநில முதல்வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகிய மீது மட்டுமின்றி சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோர் பெயர்களும் லோக் ஆயுக்தா போலீஸ் கடந்த செப். மாதம் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நவ. 6ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இது குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா திட்டமிட்டுள்ளது. வீட்டு மனை ஒதுக்கீடு குறித்தும் அதில் இருக்கும் புகார்கள் குறித்தும் விளக்கம் கேட்க அதிகாரிகள் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.