சுச்சி லீக்ஸ் போல நயன் லீக்ஸ் நிச்சயம் வரும்: சுசித்ரா!

சுச்சி லீக்ஸ் போல நயன் லீக்ஸ் நிச்சயம் வரும். அதனை தனுஷே வெளிவிடுவார் என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

தனுஷ் நயன்தார தரப்பிற்கு இடையே காப்பி ரைட்ஸ் பிரச்சனையுடன் சேர்ந்து சில தனிப்பட்ட பிரச்சனைகளும் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் பல கருத்துகள் உலாவி வந்த நிலையில், பாடகி சுசித்ரா இந்த விவகாரம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சில முக்கிய விஷயங்களைக் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

தனுஷ் மேல பெரிய மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தவங்க தான் நயன்தாரா. இவங்க தனுஷ் செய்ற பல வேலைகளால கோபப்பட்டடாலும் பல இடங்கள்ல அமைதியா இருந்தாங்க. பொறுமையாக இருந்து இருந்து அது எல்லை மீறிப் போகும் போதுதான் இப்படி லெட்டர் எழுதத் தோனும். அவங்க எமோஷனலா மட்டும் இந்த லெட்டரை எழுதல. சைட் பை சைட் லீகலாகவும் நடவடிக்கை போயிட்டு இருக்கு. நீங்க டிராக் ரெக்கார்டு எடுத்து பாத்தீங்கன்னா நயன்தாரா இப்படி யாரையும் பேசுற ஆளே கிடையாது. ஆனா தனுஷப் பத்தி எழுதுன லெட்டர்ல பல கடுமையான வார்த்தையை பயன்படுத்தி இருக்காங்க.

தனுஷ் ஒரு சைக்கோங்குறது எனக்கு தெரியும். இது மக்களுக்கும் தெரியனும்ங்கிறது காலத்தின் கட்டாயம் போல. அவனோட நிறம் எல்லாம் ஒன்னு ஒன்னா வெளிய வந்துட்டு இருக்கு. நயன்தாராவ தனுஷ் மிகவும் பர்சனலாக துன்புறுத்தினார்ன்னு எனக்கு ஆணித்தரமா தெரியும். ஷூட்டிங் முடிஞ்சதும் கார்த்தி பல நாள் வந்து என்கிட்ட தனுஷோட தொல்லை தாங்கலன்னு அழுவான். அதுக்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் சரக்கு மேல ஆசை வந்து ஒன்னா போயிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் யாரடி நீ மோகினி படத்தோட ஷீட்டிங் அப்போ விடாம நயன்தாராவ ரூட் விட்ருகாங்க.

தனுஷ் கூகுள் டாப் 10 வசனத்தை வச்சு மேடைல பேசிட்டு இருக்கான். அவரோட வாய்ல இருந்து வரதுனால அவரோட ரசிகர்கள் எல்லாம் அத வேதவாக்கா எடுத்து கொண்டாடுறாங்க. தனுஷ் தனக்கே ராஜாவா வாழுறது சட்டம் போடுறதுன்னு வாழந்துட்டு இருக்காங்க. அந்த சட்டத்த யாரும் மதிக்கலன்னா பனிஷ்மெண்ட் குடுப்பாங்க.

என்ன நெனச்சிட்டு இருக்கான் அவன் மனசுல? மண்டையிலயே கொட்டனும். ரொம்ப ஓவர் மதிப்பு மரியாதை கொடுத்துட்டீங்க. அப்படி தமிழ்நாட்டுக்கு அவன் என்ன படம் குடுத்துட்டாரு. தனுஷோட படத்த பாத்துட்டு இப்படி தான் வாழனும்ன்னு சொல்லி எத்தன பசங்க கெட்டு போயிட்டாங்க தெரியுமா? தனுஷோட எல்லா படத்துலயும் சமுதாயத்த கெடுக்க தான் எதாவது இருக்கும்.

ஷூட்டிங் சமயத்துல கூட நடிக்குறவங்களுக்கு ஹாய் சொல்றது ஒரு பண்பாடு. அத மதிக்க தெரியமா நயன்தாரா மேல லவ் வந்துட்டா என்ன பண்றது. நயன்தாரா என்ன தொக்கா? தனுஷ் தன்னோட பாக்கெட்ல கஜோல், சோனம் கபூர் மாதிரிஎப்போவும் 4 நடிகைங்கள வச்சிப்பாரு. தன்னப் பத்தி எப்போவும் நல்லவிதமா சர்ட்டிபிகேட் தர சமூதாயத்துல நல்ல இடத்துல இருக்க கொஞ்சம் பேர காக்கா பிடிச்சி வச்சிப்பான்.

சரண்யா பொன்வன்னன், மஞ்சு வாரியார் எல்லாம் தனுஷூக்கு அம்மா கேரக்டர் பண்ணுனதால அவங்க ரிலேஷன்சிப் அப்டியே இருக்கும்னு எந்த அவசியமும் இல்ல. இதெல்லாம் வெளிய இவங்கள காமிக்க ஈஸியா கிடைக்குற வாய்ப்பு. இவங்க எல்லாம் டபுள் கேம் விளையாடுறவங்க.

தன்ன உயர்த்திக்க வக்கில்லாதவங்க அடுத்தவங்கள தாழ்த்த எதாவது பண்ணுவாங்க. தனுஷ் ஒரு கட்டத்துக்கு மேல தன்னோட சுத்தி இருக்கவங்கள எதாவது பண்ண வைப்பாரு. கார்த்திக் குமார் தெரிஞ்சே தான் தனுஷோட தொல்லையால சுச்சி லீக் பண்ணுனான். சிவகார்த்திகேயனையும் அந்த மாதிரி எதாவது பண்ணுன்னு சொல்லிருப்பான். அவரு முடியாதுன்னு சொல்லிருப்பாரு அங்க அதான் பிரச்சனை ஆகிருக்கும்.

விக்னேஷ் சிவன ஏன் இன்னும் கூஜா தூக்கியாகவே பாக்குறீங்க. அவரோட பொண்டாட்டிக்கு ஒன்னுன்னு ரீடிவிட் கூட பண்ணக் கூடாதா? என்ன பண்ணனும் எல்லாம் தனுஷூக்கு சாதகமா உக்காந்து சிரிச்சிட்டு இருக்கனுமா? இல்ல டபுள் கேம் விளையாடனுமா விக்னேஷ் சிவன்?

நயன்தார கல்யாணம் சம்பந்தமா தனுஷுக்கு பத்திரிகை கூட வைக்கல. அது நல்லது தான். யாருக்கு வேணும் அவனோடு வைப். சின்மயி பண்ணுன தப்ப நயன்தாரவும் பண்ணனுமா? அதுதான் தைரியம். லேடி சூப்பர் ஸ்டார். அவருக்கு பிடிக்கல கூப்படல.

விக்னேஷ் சிவன் ஆம்பளங்குறதுல உங்களுக்கு வருத்தம் ஆகிடுச்சோ? நயன்தாரா ஒரு ஆம்பளய தான் கட்டிக்கிட்டா அப்டிங்குறதுல இவங்களுக்கு கண்டிப்பா வருத்தம் இருக்கும். சுச்சி லீக்ஸ் மாதிரி நயன் லீக்ஸ் வரப்போகுது. தனுஷ் தான் அத லீக் பண்ணுவான். அதுக்கும் தயாரா இருங்க. தனுஷ் இப்போ அவனோட பலத்த யூஸ் பண்ணி நயன்தாராக்கு எதிரா நிறைய போஸ்ட் போட்டுட்டு இருக்கான். நயன்தாரா சிம்புவோட, பிரபுதேவாவோட குப்பை கொட்டினவ தானா, நீ பெரிய உத்தமியா, கோ பேக் டு கேரளான்னு நிறைய மீம் தனுஷால வரப்போகுது. இதெல்லாம் ரெடி ஆகிட்டு வருது. இவ்வாறு சுசித்ரா கூறியுள்ளார்.