தன் சுயநலத்துக்காக தமிழக உரிமையை தாரை வார்த்தது திமுக அரசு: ஜெயக்குமார்!

டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக மத்திய அரசின் பதிலை சுட்டிக் காட்டி எடப்பாடி பழனிசாமியை திமுக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக்கும் முயற்சிக்கு அன்றைக்கு துணை நின்றது யார்? 2011ஆம் ஆண்டு கால கட்டத்தில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது யார்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தவரை காவிரி நதிநீர், கச்சதீவு, முல்லை பெரியாராக இருந்தாலும் சரி, தன் சுயநலத்துக்காக தமிழக உரிமையை தாரை வார்த்தது திமுக அரசு. 2010 ல் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு, மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதலை நாங்கள் பெற்றதில் பெருமிதம் கொள்கிறோம். இதை திமுகவின் வரலாறாகவே பார்க்கிறோம் என்று டெல்டா விவசாயிகளை பாதிக்கிற இந்தத் திட்டத்தைப் பற்றி டி.ஆர்.பாலு பெருமையோடு சொல்லுகிறார். டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக்கும் முயற்சிக்கு அன்றைக்கு துணை நின்றது யார்? அன்றைக்கு தொழில்துறை மற்றும் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், 2011 ஜனவரியில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது யார்? டி.ஆர்.பாலு சொல்லி அதை நடைமுறைப்படுத்தி ஒப்பந்தம் போட்டது ஸ்டாலின். டெல்டா மாவட்ட விவசாயிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

திமுகவின் இந்த டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியை எதிர்க்கிறோம் என்று விவசாயிகள் சொன்னதாகவும், பிறகு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இந்த டெல்டா மாவட்டங்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் சட்ட வல்லர்களோடு கலந்த ஆலோசனை செய்து, அதன் அடிப்படையில் 10.2.2020 அன்று அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எழுதிய நேர்முக கடிதத்தை , அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நானும் மூத்த அதிகாரிகளும் சென்று சந்தித்து அந்த கடிதத்தை கொடுத்த போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, வேளாண் துறை மாநில பட்டியலுடையது. மாநில அரசு இதில் சட்டம் இயற்றலாம் என்ற கருத்தில் அடிப்படையில், ஒரு சட்ட மசோதா, 20.2.2020 அன்று சட்டமன்றத்தில் அப்பவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்த மசோதாவுக்கு 21.2.2020 ல் ஆளுநரும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

இவ்வளவு பெரிய வரலாற்று உண்மை டெல்டாவை விளையாட்டுகள் உரிமையை பாதுகாப்பது, எந்த மாவட்டங்கள் பாலைவனமாகாமல் – பாலைவனமாக்கும் திமுகவின் அந்த முயற்சியை தடுத்தது இந்த கெசட் ( அரசாணை) . கடந்த 2 நாட்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் தற்போதைய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சார்பாக எந்தக் கடிதமும் பெறவில்லை என்று தெரிவித்தார் என்ற செய்திகள் வந்ததாகவும், இது உண்மைக்கு மாறான செய்தி. எந்த நிலையிலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.‌ விவசாயிகள் இன்றைக்கு அதிமுக பக்கம் இருக்கிறார்கள் என்று பொறுத்துக் கொள்ள முடியாத வயிற்று எரிச்சல் திமுகவுக்கு. அது திமுகவுக்கு கண்ணை உறுத்துகிறது. ஐடி விங்கை வைத்து தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்றும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் உரிமைகளை பறித்து பாலைவனமாக்கும் முயற்சியை எடுத்தது திமுக. அதை தடுத்தது அதிமுக அரசு. அந்த சட்டத்திற்கு இப்போதைய ஆளும் மாநில அரசே ஏற்று கொள்ளவில்லை என்றாலும் இந்த ஐடிவிங், சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போல செய்திருக்கின்றது.

சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய பகுதிகளில் சுரங்கங்களை தோண்ட மத்திய அரசு விரும்புகிறது.‌ அதற்கு இப்போதைய முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதை சொன்னது தங்கம் தென்னரசு எனவும், மத்திய அரசின் இந்த அறிவிப்பை நிலக்கரி அமைச்சகம் வெளியிடுவதற்கு முன்பு, தமிழக அரசிடம் கழந்தாலோசிக்காமல் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக அறிவித்தது துரதிஷ்டம் என்றும், அரியலூர் மைக்கேல் பட்டி அதிகமாக நெல் விளையும் பகுதி என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அந்த கடிதத்தில் வேளாண் பிரிவு சட்டத்தை சுட்டிக் காட்டி புதிய திட்டத்தின் செயல்பாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இது போன்ற செயல்களில் திமுக ஐடி விங் ஈடுபட்டால் எடுபட போவதில்லை.. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த சட்டமே போதுமானது.‌ மலிவான விளம்பரம் மூலம் விவசாயிகள் மத்தியில் இப்படி செய்வது எடுபடாது. வேளாண்மை மாநில பட்டியலில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.