மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான ‘வாழை’ பலரின் பாராட்டுக்களை குவித்ததுடன் வசூலிலும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்றினை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. தற்போது சினிமா, சின்னத்திரை என பிசியாக கலக்கி வரும் இவரது இயக்கத்தில் விரைவில் ‘விடுதலை பார்ட் 2’ வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்புடன் காத்திருப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து மரண மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக ‘மகாராஜா’ ரிலீஸ் ஆனது. நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் அவரது 50 வது படமாக ரிலீசான இதில் அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், அபிராமி, திவ்யா பாரதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருத்தார். ஒரு பெண் பிள்ளையாக தந்தையாக விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து, பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் இவரது இயக்கத்தில் கடைசியாக ‘வாழை’ ரிலீஸ் ஆனது. இதனையடுத்து துருவ் விக்ரம் இயக்கத்தில் தற்போது ‘பைசன்’ படத்தினை இயக்கி வருகிறார். அதன்பின்னர் கார்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படங்களை தொடர்ந்து ரஜினி இயக்கத்தில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதியை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பார்ட் 2’ ரிலீஸ் ஆகவிருக்கிறது.