சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் மகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் இருக்ககூடிய முக்கியமான கட்சிகளில் ஒன்று, பாட்டாளி மக்கள் கட்சி. அதன் தலைவராக இருப்பவர் அன்புமணி ராமதாஸ். அவரது மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணி. இவர் அலங்கு என்ற படத்தினை தயாரித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இதுதான். இந்தப் படத்தின் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படத்தினை எஸ்.பி. சக்திவேல் இந்தப் படத்தினை எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு பாண்டி குமார் ஒளிபதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும், படத்தில் குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. படத்திற்கு அஜீஸ் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் அலங்கு படக்குழுவினர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, அலங்கு படத்தின் ட்ரைலர் அவருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அலங்கு படத்தின் ட்ரைலரைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், படக்குழுவினருக்கு படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் நாளை மறுநாள் பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு அலங்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது சங்கமித்ரா சௌமியா அன்புமணி, படத்தின் நடிகர்கள், படத்தின் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரைலர் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட பாடல் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூவ்ஸ்களைப் பெற்றுள்ளது.