நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர் துணிவு படத்தில் நடித்திருந்தார். பின்னர் இருவரும் இணைந்து பைக் ரைட் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை – 2 படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச.20ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
விடுதலை 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற மஞ்சு வாரியர் கூறியதாவது:
அஜித்குமார் சார் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக பேசுவார். எனக்கு சிறிய வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்பது ஆசை. நான் எனது பக்கெட் லிஸ்டில்கூட இதுபற்றி எழுதி வைத்திருக்கிறேன்.
அஜித் சாருக்கு பைக் மீதிருக்கும் ஆர்வம் என்னையும் எனது ஆசை மீது ஏதாவது செய்ய வேண்டுமென தூண்டியது. அவருக்கு பிடித்ததை செய்ய நேரம் ஒதுக்கி செய்கிறார். நமக்கு பிடித்ததை செய்ய அஜித் சாரைப் பார்த்து நானும் எங்கேயோ ஊக்கமடைந்திருக்கிறேன். நமக்கு பிடித்ததை செய்ய அவரும் ஒரு காரணமாக இருக்கிறார். பைக் நம்மை மன்னிக்காது. நாம் சரியாக பயன்படுத்தினால் அதுவும் சரியாக வேலை செய்யும் என அஜித் கூறினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.