கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் வாழ்த்திய விஜய் புகைப்படம் வைரல்!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் 15 ஆண்டுகளாக மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் தெரியாமல் காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துக் கொண்டார். நேற்று தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், விஜய்க்கும் அப்படி கீர்த்தி சுரேஷ் முத்தம் கொடுக்கும் போட்டோ வருமா என ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தம்பதியரின் தோள்மீது கைபோட்டு தளபதி விஜய் திருமணத்தில் வாழ்த்து தெரிவித்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த நிலையில், கீர்த்தி சுரேஷ் – சிவகார்த்திகேயன் கிசுகிசுக்கள் காணாமல் போய் விஜய் – கீர்த்தி சுரேஷ் கிசுகிசு கீர்த்தி சுரேஷின் திருமண அறிவிப்புக்கு முன்னர் வரை புகைந்துக் கொண்டிருந்தது. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய் சென்றிருந்த நிலையில், அவருடைய பாடிகாடுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மட்டுமே முதலில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னையும் தனது கணவரையும் தளபதி விஜய் வாழ்த்திய புகைப்படங்களை எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், ட்ரீம் ஐகான் விஜய் என்னுடைய ட்ரீம் வெட்டிங்கில் பங்கேற்று வாழ்த்தியுள்ளார் என ஃபேன் கேர்ள் மொமண்ட்டை வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ் சிரிக்க, அதற்கு செம க்யூட்டாக அவர்களுக்கு கை கொடுத்து வாழ்த்திவிட்டு விஜய் சிரிக்கும் செம க்யூட்டான தருணத்தை போட்டோகிராஃபர் பக்காவாக கேப்சர் செய்து ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார்.

இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் லீடு ரோலில் நடித்த ரகு தாத்தா படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது. அட்லீ தயாரிப்பில் காலீஸ் இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. சமந்தாவுடன் இணைந்து சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்த வருண் தவான் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.