விடுதலை பாகம் இரண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் படம் பார்த்த வி.ஜே. பார்வதி, சென்சார் போர்டினை நோக்கி பல கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் நேற்று முன் தினம்தான் அனைத்துப் பணிகளும் முழுமையாக நடைபெற்று முடிந்ததாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்தார். அதிலும் அவர், படத்தின் நீளத்தில் இருந்து சுமார் 8 நிமிடங்களைக் குறைத்துவிட்டதாக தெரிவித்தார். படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக விஜய் சேதுபதி, கென், மஞ்சு வாரியரின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்தப் படத்திலும் இளையராஜா தனித்துத் தெரிகின்றார் எனக் கூறி வருகின்றனர். ”
இந்நிலையில் படம் பார்த்த வி.ஜே. பார்வதி, சென்சார் போர்டினை நோக்கி பல கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-
இந்தப் படத்தில் வரக்கூடிய மிகவும் மோசமான, விஷமத்தனமான கதாபாத்திரங்கள்தான் நிஜ வாழ்க்கையில் சமூகத்தில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய பாசிசத்தின் முகங்கள். படத்திற்கு ஏற்கனவே ‘A’ சர்டிஃபிகேட் கொடுத்துட்டீங்க.. அப்பறம் ஏன் பல வார்த்தைகளை மியூட் செஞ்சீங்க. பிரச்னையை தீர்ப்பதற்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த களங்களில் இருந்து உருவாக்கிக்க வேண்டும் எனும் வசனத்தை, இந்திய திரைப்படத் தனிக்கைக் குழு, விடுதலை படக்குழுவினருக்கு அழுத்தம் கொடுத்து என்ன சேர்க்கச் சொல்லி இருக்கின்றார்கள் என்றால், அந்த ஆயுதம் ஓட்டாகக் கூட இருக்கலாம் என.
அதேநேரத்தில், தேசிய இன விடுதலை, எனும் வசனத்தையும் எடுக்கச் சொல்லியுள்ளார்கள். மேலும் இந்திய தணிக்கைக் குழு, நிஜத்தில் இருக்க கூடிய அரசியல் கட்சிகள் குறித்தோ, நிஜ வாழ்க்கையில் உள்ள அரசியல் மாதிரிகளையோ பயன்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்கள். எத்தனையோ படங்களில் முஸ்லீம் வெறுப்பு பேச்சுகள், வசனங்கள் உள்ளது. அதையெல்லாம் எடுக்கச் சொல்லாத இந்திய திரைப்படத் தணிக்கைக் குழு, நிஜ அரசியலை ஒரு படத்தில் பேசும்போதுமட்டும் ஏன் பயப்படுகின்றார்கள்? கருத்துச் சுதந்திரம், ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் என்பது, இந்திய திரைப்படத் தணிக்கைக் குழு புகுத்துகின்ற அரசியல் கருத்துகளுடன் இருந்தால் மட்டும்தான் ரைட், இல்லையென்றால் லெஃப்ட். அதுதான் இந்த விடுதலை படத்தில் உள்ளது. அப்பறம் எங்க இருக்கு விடுதலை? அதற்காகத்தான் விடுதலை படத்தைப் பார்க்கவேண்டும். மீண்டும் மீண்டும் பார்க்கனும், நெறைய முறை பார்க்கனும், அந்தப் படத்தைப் பார்த்த பின்னராவது, நிஜ அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக நன்றி தோழர் வெற்றி மாறன் என பதிவிட்டுள்ளார். படத்தில் ஆங்காங்கே கெட்ட வார்த்தைகள் வந்தாலும், நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் அதிலும் குறிப்பாக அதிகாரம் பெற்ற மனிதர்கள், இவ்வாறுதான் நடந்துகொள்கின்றார்கள் என படக்குழுவினருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பார்வதி தனது வீடியோவில் பேசியவை உண்மைதான் எனவும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.