கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் அவரது 15 ஆண்டுகால நண்பர் ஆண்டனி தட்டிலுடன் வெகு விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் விஜய், திரிஷா, இயக்குநர் அட்லி, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் ரவுண்டு கட்டி நடித்த நிலையில் அடுத்ததாக அவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ள பேபி ஜான் படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. காலீஸ் இயக்கத்தில் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் வருண் தவான், வாமிகா கபி உள்ளிட்டவர்களுடன் கீர்த்தி சுரேஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் பாலிவுட்டில் அவர் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான தெறி படத்தின் ரீமேக்காக பேபி ஜான் உருவாகியுள்ளது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்திருந்தார் .இந்த திருமணத்திற்கு விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில தினங்களிலேயே பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ள கீர்த்தி சுரேஷ் வந்துவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மணமக்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷுக்கு திருமண வாழ்த்துக்களை மீண்டும் பகிர்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப்படம் கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் அவரது திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ். அது மட்டுமில்லாமல் தற்போது instagramலும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த தருணத்திற்காக கீர்த்தி சுரேஷ் நீண்ட காலங்களாக காத்திருந்ததாகவும் அவரது கனவு நனவாகியுள்ளதாகவும் மாரி செல்வராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.