திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: ரோஜா கண்டனம்!

திருப்பதியில் நடந்த சம்பவம் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ரோஜா கூறியதாவது:-

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி 6 உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தெலங்கானாவில் புஷ்பா 2 பட விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜூன் காண திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தாா். எனவே அவா் மீது குற்றபிரிவு எண் 105 பிஎன்எஸ் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

ஆனால் திருப்பதியில் நடந்த சம்பவதிற்கு பொறுப்பேற்க வேண்டியவா்கள் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு முதல் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா், செயல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், காவல்துறைபதிகாரிகள் என அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இந்த சம்பவத்தின் மீது குற்ற பிரிவு எண் 195 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. இது அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த விவகாரத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜிநாமா செய்ய வைப்பாரா? என ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.