ஈரோடு இடைத்தேர்தல் போட்டி குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு: ஓ.பன்னீர்செல்வம்!

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான சட்ட திருத்தம் அனைத்து குற்ற நடவடிக்கையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளிடம் கலந்துபேசி முடிவெடுப்போம். திமுகவை பொறுத்தவரை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு பேச்சும், அதற்கு பின்பு ஒரு பேச்சுமாக இருப்பது அவர்களுக்கு வாடிக்கையானது.

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதலில் குரல் கொடுத்தவர்கள், அதிமுக உரிமை மீட்புக்குழு ஆகிய நாங்கள் தான். அந்த வகையில் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அதை தடுத்த நிறுத்துகின்ற இயக்கமாக எங்கள் இயக்கம் இருக்கும். தேர்தல் குறித்து முதல்வரின் நிலைப்பாடு வேறு, மக்களின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது. மாணவியை பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு எதிரான சட்ட திருத்தம் அனைத்து குற்ற நடவடிக்கையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.

திமுகவை பொருத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு பேச்சும் அதற்கு பின்பு ஒரு பேச்சுமாக இருக்கிறது என்பது ஒரு வாடிக்கையானது. மக்களை திமுக ஏமாற்றுவதாக விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா? திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே தெரிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.