​திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: குருமூர்த்தி!

அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால் விட இருக்​கிறேன் என்று ‘துக்​ளக்’ இதழின் ஆசிரியர் குரு​மூர்த்தி தெரி​வித்​தார்.

துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்றது. இதில் ‘துக்​ளக்’ ஆசிரியர் குரு​மூர்த்தி பேசியதாவது:-

காங்​கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜக​வின் கொள்​கையை ஏற்க​முடி​யாது. பாரத ஜனநாயகத்​துக்கு எதிர்க்​கட்சி என்பது அவசி​யம். ஆனால், அந்த கட்சி​யின் எதிர்​காலம் ராகுலை சார்ந்​துள்ளது. தலைமை பொறுப்​புக்கு ராகுல் தகுதி​யில்லை என்பதை முன்பே கூறி​விட்​டோம். தற்போது கூட்​ட​ணி​யில் உள்ள தோழமை கட்சிகளும் அதை உணர்ந்து கூறிவரு​கின்​றனர்.

தமிழகத்​தில் சமுதாய அளவில் பெரிய மாற்றம் வந்து கொண்​டிருக்​கிறது. அரசியல் அளவில் அந்த மாற்றம் வராமல் தடுப்​ப​தற்கான காரணம் வாக்கு வங்கி மற்றும் சாதி அரசி​யல். இந்த இரண்​டை​யும் உடைக்​கும்​போது தேசிய அரசியல் தமிழகத்​தில் உருவாகும். இங்கு ஆர்எஸ்​எஸ், பாஜக எந்த அளவுக்கு வளர்​கிறதோ, அந்த அளவுக்​கு​தான் மாற்றம் வரும். தற்போதைய முதல்வர் ஸ்டா​லின் பலவீனமான தலைவர். எனவே, திமுக​வுக்கு தனிப்​பெரும்​பான்மை கிடைக்க​வில்லை எனில், அவர் நிச்​சயமாக ஆட்சி​யில் பங்கு கொடுத்​து​தான் ஆக வேண்​டும்.

அடுத்த ஆண்டு தேர்தல் வருவ​தால் எல்லா கூட்​ட​ணி​யிலும் நிலை​யற்ற நிலைமை உள்ளது. திமுகவை தோற்​கடிக்க பாஜக​வும், அதிமுக​வும் சேர வேண்​டும் என்ப​தில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒருதலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரிய​வில்லை. திமுகவை தோற்​கடிக்க வேண்​டும் என்ற உறுதி பழனிசாமி​யிடம் இல்லை. அரசி​யலில் முதல்​முறையாக பெரி​யாரை நேரடியாக எதிர்த்​ததற்காக சீமானை பாராட்டு​கிறேன். இது தமிழகத்​துக்கு நல்லது. அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்​துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால்விட இருக்​கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய வர்த்​தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:-

திட்​ட​மிட்ட கொள்​கைகள், வெளிப்​படையான நிர்​வாகம் காரணமாக இந்தியா கடந்த 10 ஆண்டு​களில் பெரும் வளர்ச்சி அடைந்​துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த 22 ஆண்டு​களுக்கு தொடரும். இதனால் 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாகும். அதற்கான அடித்​தளத்தை பிரதமர் மோடி வலுவாக அமைத்​துள்ளார். இந்திய அரசியல் சாசனத்​தில் 370-வது பிரிவை நீக்க தைரியமாக நடவடிக்கை எடுத்​தார் பிரதமர் மோடி. தனது அதிரடி நடவடிக்கைகளால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்​தார்.

மத்திய அரசு கொண்டு​வரும் ஒவ்வொரு திட்​ட​மும் மக்களின் நல்வாழ்​வை​யும், சமூக மேம்​பாட்​டை​யும் மனதில் கொண்டு செயல்​படுத்​தப்​படு​கிறது. வெளிப்​படையான நிர்​வாகம் பின்​பற்​றப்​படு​வ​தால் முறை​கேடு என்ற பேச்​சுக்கே இடமில்லை. தற்போது இந்தியா அடைந்​துள்ள எழுச்​சி​யால் உலக நாடுகள் இந்தியா​வின் தலைமைத்து​வத்தை அங்கீகரிக்க தொடங்​கி​ உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்​நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்​பையா கூறியதாவது:-

நாட்​டில் படித்​தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு மாறாக அரசி​யலின் தரம் மிகவும் கீழ்​நோக்கி சென்று கொண்​டிருக்​கிறது. ஒருங்​கிணைந்த பள்ளி​கல்​வித் திட்​டத்​தில் மத்திய அரசு நிதி தர மறுப்​ப​தால்​தான் அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்கு ஊதியம் தர முடிய​வில்லை என்று தமிழக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும், தமிழக அரசி​யலில் அறிவார்ந்த வாதங்களை முன்​வைக்க சிறந்த தலைவர்கள் இல்லை.

அதேபோல, நிலையான கொள்கை மற்றும் கருத்​துகளால் நாடு முன்னேற முடி​யாது. காலத்​துக்கு ஏற்ப தங்கள் கருத்து​களை​யும், கொள்​கைகளை​யும் மாற்றிக் கொள்வது தவறு கிடை​யாது. அது தர்மத்​துடன் பொருந்​துகிறதா என்ப​தை​தான் பார்க்க வேண்​டும். அரசியல் தலைவர்​கள், ஆட்சி​யாளர்​கள், அதிகாரிகள் என அனைவரும் வெளிப்​படையாக ஊழல் செய்​யும் ஒரு சூழல் தமிழகத்​தில் உருவாகி​யுள்​ளது. அண்ணா பல்லைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்​தில் உயர் நீதி​மன்​றம் ​தாமாக ​முன்​வந்து சிறப்பு குழுவை நியமித்​துள்ளது. இது தமிழக அரசுக்​கும், ​காவல் துறைக்​கும் கிடைத்த அவ​மானம். நேர்​மையற்ற அரசி​யல் தலை​வர்​களின் கை​யில் அதிகாரி​கள் இருக்​கும் ​போது, மக்​களுக்கு நீதி கிடைக்​கும் என்​பதை உறு​தியாக நம்ப ​முடி​யாது. இவ்​வாறு அவர்​கள்​ பேசினர்.