இந்தியா கூட்டணி சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி: மாயாவதி!

‘இந்தியா’ கூட்டணி, சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி. அதற்கு எதிர்காலம் இல்லை என்று மாயாவதி கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 69-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி சட்டசபை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமல் நேர்மையாக நடந்தால், அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும். பகுஜன் சமாஜ் கட்சி நல்ல வெற்றி பெறும். டெல்லியில் வசிக்கும் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த மக்கள், கொரோனா சமயத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அதை மனதில் வைத்து அவர்கள் வாக்களிக்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணி, சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி. அதற்கு எதிர்காலம் இல்லை. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு மாற்று, எங்கள் கட்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.