அஜித் சாருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று யோகி பாபு கூறினார்
நடிகர் அஜித்குமாருக்கு இந்த ஆண்டு தொடங்கியதுதான் கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், அதன் பின்னர் இரண்டாவது வாரத்தில் இருந்து, இந்த ஆண்டு அவருக்கான ஆண்டாக மாறிவிட்டது. கார் ரேஸில் வெற்றி, பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு என அஜித், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியான நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த யோகிபாபு அஜித்துக்கு தனி பாராட்டு விழா நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் யோகிபாபு, ‘எவ்வளவு பெரிய சாதனை படைத்திருக்கிறார். அஜித் சாருக்கு வாழ்த்து சொல்ல, அவர் குறித்து பேச தனி விழாவே நடத்தனும். அதற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யனும். அந்த விழாவில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். அப்போது அஜித் சார் குறித்து நான் நிறைய பேசுகின்றேன் எனக் கூறினார். இவரது பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டு விழா நடத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாராட்டு விழா நடத்தினால், அஜித் அதில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மண்டேலா’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘போட், தி கோட், டீன்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கார் ரேஸில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்துக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று யோகி பாபு கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்திருந்த யோகிபாபு தற்போது பிரபாசுடன் தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.