வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும்: மீனாட்சி சௌத்ரி!

வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் தேவையில்லை. வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும் என்று மீனாட்சி சௌத்ரி கூறியுள்ளார்.

நடிகை மீனாட்சி சௌத்ரி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி நடித்து கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே மீனாட்சி சௌத்ரிக்கு லக்காகவே அமைந்தன. ஆனால் கோட் படத்தில் இவரது கேரக்டர் விமர்சனங்களுக்கு உள்ளானது. மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் உண்மையான காதல் என்று நம்பி இடையிலேயே உயிரிழக்கும் கேரக்டர் இவருக்கு. இடையில் பாடல் காட்சியிலும் தோன்றினார். ஆனாலும் இந்த கேரக்டர் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனிடையே, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனிடையே மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள பேட்டியொன்றில் வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு நம்மை உச்சத்தில் கொண்டு நிறுத்தி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாரும் நம்முடைய வெற்றியை தடுத்துவிட முடியாது என்றும் கூறியுள்ளார். அழகு, திறமை அதிகமாக உள்ளவர்களும் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு வெற்றி சாத்தியப்படாது என்றும் தெரிவித்துள்ளார். அத்தகைய நபர்களுடன் எளிதாக போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றும் மீனாட்சி சௌத்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது சாய் அபயங்கர் இசையமைத்துள்ள சித்திர புத்திரி பாடலிலும் அவருடன் இணைந்து ஆடியுள்ளார். இந்தப் பாடலில் புதையலை தேடிப் போகும் சாய் அபயங்கருக்கு புதையலாக மீனாட்சி சௌத்ரி கிடைப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இளவரசியாக, மிகவும் அழகாக இந்த வீடியோ பாடலில் காணப்படுகிறார் மீனாட்சி சௌத்ரி. வெளியாகி ஒரு தினத்திலேயே 3 மில்லியன் வியூஸ்களை இந்த பாடல் பெற்றுள்ளது.