காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் ‘ஏ’ டீம் என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக குமரி அனந்தன் மகளும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவர் எதற்கெடுத்தாலும் பா.ஜ.க.வை குற்றம்சாட்டுகிறார். யார் வீட்டிலாவது சமையல் செய்யமுடியவில்லை என்றால் கூட பா.ஜ.க.வின் சதியாக இருக்குமோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு சென்றுவிட்டார். அவர் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முற்பட்டதாகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் என்று கூறியதால் செல்லவில்லை என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். எங்களைப் பார்த்து ‘பி’ டீம், ‘சி’ டீம் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க.வின் ‘ஏ’ டீம்.”
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.