வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தோல்வி: எல்.முருகன்!

வேங்​கைவயல் விவகாரத்​தில் திமுக அரசு தோல்​வி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்டம், சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நேற்று நடைபெற்​றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் பேசி​ய​தாவது:-

மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட். இளைஞர்​கள், விவசா​யிகள், மகளிருக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்​தளமாக அமைந்​துள்ளது. கடந்த 10 ஆண்டு​களாக நாடு அனைத்து துறை​களி​லும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்கள் சொல்ல முடியாத துன்​பத்​துக்கு ஆளாகி உள்ளனர்.

ஆட்சிக்கு வந்ததும் கொள்​ளை​யடிக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் மின் கட்ட​ணம், சொத்துவரி உயர்வு என அனைத்து சுமை​களை​யும் மக்கள் தலையில் வைத்து​விட்​டனர். ஆனால், போலி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வருகின்​றனர்.

தமிழகத்​தில் பெண்​களின் பாது​காப்பு மிகப்​பெரிய கேள்விக்​குறியாக உள்ளது. பாலியல் குற்​றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. குற்​றங்கள் பல மடங்கு உயர்ந்​துள்ளன. இதைப் பற்றியெல்​லாம் திமுக​வினர் கவலைப்​படு​வ​தில்லை.

வேங்​கைவயல் விவகாரத்​தில் புகார் கொடுத்​தவர்​களையே குற்​றவாளி​களாக்கி மிகப்​பெரிய அநீதியை திமுக அரசு அரங்​கேற்றி உள்ளது. இது திமுக அரசின் தோல்​வியைத்​தான் காட்டு​கிறது. மக்களை ஏமாற்றும் மாயாஜால வேலைகளை திமுக செய்​கிறது. திமுக என்றாலே, ஏமாற்று​வது, ஊழல் செய்​வது​தான். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்​கும் உள்ளது. 2026-ல் பாஜக தலைமை​யில் தமிழகத்​தில் ஆட்சியை அமைக்க வேண்​டும். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்​டும். இவ்வாறு அவர் பேசினார்.